×

கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: 7 கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கோ ஆப்டெக்ஸில் 175 விற்பனை நிலையம், 8 ஒப்பந்த விற்பனை நிலையம், 18 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இதில், 500க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், 200க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் என மொத்தம் ஆயிரத்துக்கம் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், 7 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு கட்டாயம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து  கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் மேலாண் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில்,தமிழக அரசின் கைத்தறித்துறை மற்றும் கைவினைத்துறை செயலாளர் 1.7.2018 முதல் 7 சதவீதம் ஊதிய உயர்வுக்கு உத்தரவிட்டும் தற்போது வரை வழங்கவில்லை.

கடந்த 2009 மற்றும் 2014ம் ஆண்டு சம்பள உயர்வு அறிவிப்பு ஆணையில் அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி கோ ஆப்டெக்ஸ்  ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்ததை தற்போது வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படியில் 20 சதவீதம் மட்டும் உயர்வு என்பதை தொழிற்சங்கங்கள் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு செய்ததை எங்கள் சங்கம் ஏற்கவில்லை. முன்பு வழங்கப்பட்டது போன்று அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு வாடகைப்படி, நகரஈட்டுப்படி 1.10.2017 முதல் வழங்க வேண்டும். கடன் விற்பனை நிலுவைகளை விற்பனை செய்த ஊழியர்களிடம் பிடித்த ம் செய்யக்கூடாது. நிலுவை தொகைகளை வசூலிக்க நிர்வாகமே சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேணடும்.  விற்பனை நிலையங்களை மூடுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.8ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Co , Co optex employees, strike
× RELATED பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை...