×

ஜெகன்மோகன் பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்குக்கு எடைக்கு எடை அரிசி

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பிறந்த நாளையொட்டி பிளாஸ்டிக் வழங்குபவர்களுக்கு எடைக்கு எடை அரிசி வழங்கும் திட்டத்தை மாநில தொழிற்சாலைகள் திட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சி  ஆணைய தலைவர் ரோஜா தொடங்கி வைத்தார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வளர்ச்சி  ஆணைய தலைவரும் நடிகையுமான ரோஜா எம்எல்ஏ, முதல்வர் ஜெகன்மோகனின் பிறந்த நாளை புதுமையாக கொண்டாடினார். இதில், சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் நகரி தொகுதியில்  பொதுமக்களிடமிருந்து பிளாஸ்டிக்கை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி பொதுமக்கள் எத்தனை கிலோ பிளாஸ்டிக் தருகிறார்களோ அவர்களுக்கு அதே எடையில் அரிசி வழங்கப்படுகிறது.

Tags : Jeganmohan Birthday ,Birthday ,Rice , Jagannmohan, Birthday, Plastic, Weight to Weight, Rice
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி: பழ.நெடுமாறன்