×

அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 6 பேர் பலி

லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். கர்ப்பிணி பெண் உள்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். லாஸ் வேகாஸ் நகரில் நாற்பத்தியொரு பிரிவுகளை கொண்ட 3 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அங்கு கடும் குளிர் நிலவுவதால், இங்குள்ள குடியிருப்பின் முதல் தளத்தில் ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம்  ஹீட்டரை போட்டு வைத்துள்ளனர். அதன் பின்னர், அதிகாலை 4 மணியளவில் அங்கு திடீர்  திடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி பலியாயினர். 3வது மாடியில் இருந்து குதித்து காப்பாற்றி கொள்ள முயன்ற கர்ப்பிணி பெண் உள்பட 13 பேர் காயமடைந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Tags : Apartments , Apartments, fire, 6 killed
× RELATED உரிய ஆவணமில்லாத ரூ.68 ஆயிரம் பறிமுதல்