×

தேர்தலுக்கு வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி தீவிரம்: 2 நாளில் முடிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுரை

சென்னை : தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி கடந்த 16ம் தேதி நிறைவடைந்தது. இதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸ் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. இதில் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1 லட்சத்து 70 ஆயிரத்து 898 வேட்பாளர்களும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 35,611 வேட்பாளர்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 22, 776 வேட்பாளர்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,605 வேட்பார்களும்  போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அனைவருக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணிகள் தீவரப்படுத்த ேவண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான அச்சகத்தை மாவட்ட அளவில் கண்டறிந்து அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதன்படி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் வாக்கச்சீட்டுகளை அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த பணியை 2 நாட்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்பிறகு கட்சி வாக்குச்சீட்டுகளை பிரித்து அனுப்புவது, வாக்குப் பதிவுக்கான பொருட்கள் தயார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


Tags : election ,district administration ,Advise District Administration , Election, ballot printing, intensity
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்