×

இந்தியாவின் நிச்சயமற்ற நிலை அண்டை நாடுகளை பாதிக்கும்: வங்கதேசம் கவலை

தாகா:‘‘இந்தியாவில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டால், அது அண்டை நாடுகளை பாதிக்கும்’’ என வங்கதேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமென் தெரிவித்துள்ளார். இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை எதிர்த்து போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன. இப்பிரச்னை குறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமென் நேற்று அளித்த பேட்டி: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்திய அரசு மீண்டும், மீண்டும் இது உள்நாட்டு விவகாரம் என்பதை உறுதி செய்துள்ளது.

இந்த சட்டத்தால் எந்த சூழ்நிலையிலும் வங்கதேசம் பாதிக்காது என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். நாங்கள் இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். நாங்கள் இந்தியாவின் நண்பர்களில் முதலாவதாக இருக்கிறோம். இந்தியாவில் ஏதாவது நிச்சயமற்ற நிலை ஏற்பட்டால், அது அண்டை நாடுகளையும் பாதிக்கும். அமெக்காவில் பொருளாதாரம் சரிந்தால் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்படுகிறது. ஏனென்றால், நாம் சர்வதேச உலகை சார்ந்து வாழ்கிறோம். எனவேதான், இந்தியாவில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டால் அது அண்டை நாடுகளையும் பாதிக்கும் என்ற அச்சத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்தியாவில் நடப்பது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம். அதற்கு, அந்நாடு தான் தீர்வு காண வேண்டும்.

Tags : India ,countries ,Bangladesh ,neighbors , India's uncertainty affects , neighbors, Bangladesh , concerned
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...