×

ஆப்கான் அதிபர் தேர்தலில் அஷ்ரப்கனி அமோக வெற்றி: முடிவை ஏற்க அப்துல்லா மறுப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தான்  அதிபர் அஷ்ரப் கனியின் பதவிக் காலம்  சமீபத்தில் முடிந்தது. இதனால், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த செப்டம்பர் 28ம் தேதி நடைபெற்றது. இதில், அஷ்ரப் கனி, ஆப்கானிஸ்தான் முன்னாள் தலைமை நிர்வாகி அப்துல்லா அப்துல்லா உட்பட 18  வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் முதல் கட்ட முடிவுகள்  கடந்த அக்டோபரில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  தொழில்நுட்ப கோளாறுகள், அப்துல்லா அப்துல்லா உட்பட பல வேட்பாளர்கள் தேர்தலில் முறைகேடு நடந்ததாக  குற்றம்சாட்டியதால் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முதல் கட்ட முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், அஷ்ரப் கனி 50.64 சதவீத வாக்குகள் பெற்று பெரும்பான்மை பலத்துடன் அமோக  வெற்றி பெற்றுள்ளார். அப்துல்லா அப்துல்லா 39.52 சதவீத  வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க முடியாது என அப்துல்லா அப்துல்லா அறிவித்துள்ளார்.  ஆப்கானிஸ்தான் தேர்தல் விதிமுறைப்படி, வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அறிவிக்கப்படும் முடிவுகள் முதல் கட்டமாகவே கருதப்படுகிறது. இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, தேர்தலில் போட்டியிட்ட அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும். அதன்படி செய்யப்படும் மேல்முறையீடுகள் விசாரிக்கப்பட்ட பிறகே, வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

Tags : Ashraf Ghani ,president ,Afghan ,election ,Abdullah ,Ashrafgani , Afghan President wins election, Ashrafgani
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...