×

கால்நடை பட்டப்படிப்பில் 18தங்க பதக்கங்கள் குவித்த இல்லத்தரசி: ஊக்கமே காரணம் என்று பெருமிதம்

நாமக்கல்: நாமக்கல் இளம்ெபண் கால்நடை பட்டப்படிப்பில் 18 தங்க பதக்கங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். நாமக்கல் அருகேயுள்ள காளப்பநாயக்கபட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் ஆனந்தி (24).  டிரைவரான குணசேகரன் தனது மகளை நன்றாக படிக்கவைத்தார்.  கடந்த 2012ல் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வில் ஆனந்தி 1158 மதிப்பெண்கள் பெற்றார். குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து மேற்படிப்பு படிக்க வைக்க முடியாமல் ஆனந்திக்கு பெற்றேர்கள் திருமணம் செய்து வைத்தனர். இதனால் உடனடியாக ஆனந்தியால் மேற்படிப்பு படிக்க இயலவில்லை. பின்னர் கடந்த 2013ம் ஆண்டு, கணவர் ரமேஷின் உதவியுடன் தஞ்சை ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்தார். அப்போது 4 மாத கைக்குழந்தையுடன் இருந்த ஆனந்தி விடாமுயற்சியுடன் தொடர்ந்து படித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மாணவியாக விளங்கிய ஆனந்தி, தேர்வில் அதிக மதிப்பெண்பெற்று பல்கலைகழக அளவில் கோல்டுமெடல் வாங்கினார். கடந்த 2018-ம் ஆண்டு கால்நடை மருத்துவ பட்டப்படிப்பை முடிக்கும் போது 18 தங்க பதக்கங்ளை குவித்திருந்தார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆனந்திக்கு பட்டம் வழங்கி பாராட்டி 18 தங்க பதக்கம் மற்றம் நற்சான்றிதழை வழங்கினார். தற்போது, நாமக்கல் மாவட்ட ஆவினில் கால்நடை ஆலோசகராக  ஆனந்தி பணியாற்றி வருகிறார்.

இது குறித்து ஆனந்தி கூறுகையில், ‘‘எம்பிபிஎஸ் படிக்க விரும்பிய எனக்கு கட்-ஆப் மார்க் குறைந்ததால் அது கனவாகிப்போனது. அதே நேரத்தில் எங்கள் வீட்டிலும், சுற்றுப்புறங்களிலும் கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாதால் அவை இறப்பதும் வாடிக்கையாக இருந்தது. இதனால் கால்நடை மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்தேன். 2குழந்தைகள் பிறந்த நிலையில் பலரது கேலி, கிண்டல்களை தாண்டி கணவர், பெற்றோர், மாமனார், மாமியார், பேராசிரியர்கள் ஊக்கத்தால்  படிப்பில் தங்கப்பதக்கங்கள் பெற்று சாதிக்க முடிந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறந்த மாணவிக்கான விருது ெபற்றது வாழ்வில் மறக்க முடியாதது,’’ என்றார்.

Tags : Housewife , Housewife ,18 Gold Medals ,Veterinary Degree
× RELATED வருகிற 28ம் தேதி ‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா