×

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரேஸ் வாலிபர்களால் விபத்து அதிகரிப்பு

* போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் :தமிழகத்தில் கடந்த ஆண்டு 63 ஆயிரத்து 920 வாகன விபத்துகள் நடந்துள்ளது. இதில் 12 ஆயிரத்து 216 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான விபத்துகள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவு ஆகியவையே 90 சதவீதத்துக்கும் அதிகமான விபத்துக்கு காரணமாக இருக்கிறது. இந்நிலையில், நெடுஞ்சாலைகளில் அத்துமீறி வாலிபர்கள் பைக் ரேஸ் செல்வதால் விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர்கள் பைக் ரேஸ் செல்வது அதிகரித்து வருகிறது. அதிவேகமாக செல்பவர்கள், வாகனங்களுக்கு இடையே நுழைந்து தாறுமாறாக ஓட்டிச் செல்கின்றனர். இதனால், விபத்துக்கள் ஏற்படுகிறது.  எனவே, பைக் ரேஸ் செல்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளில் அதிகளவில் பைக் ரேஸ் செல்கின்றனர். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்’ என்றனர்.

நெடுஞ்சாலைகளில் 265 இடங்கள்

தமிழகம் முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில்தான் அதிகளவில் விபத்துகள் நடந்துள்ளது. எனவே தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அதிகளவில் விபத்து நடக்கும் இடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் நெடுஞ்சாலைகளில் 265 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த இடங்களில் மட்டும் கண்காணிக்க தொடங்கினால், பைக் ரேஸ் செல்லும் வாலிபர்களை எளிதில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோல், வாட்ஸ் அப்பில் குழு அமைத்து பல்வேறு இடங்களில் இருக்கும் வாலிபர்கள் பைக் ரேஸ் செல்ல ஒன்று கூடுவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விடுமுறை நாட்களில்தான் இதுபோன்று பைக் ரேஸ் அதிகளவில் செல்கின்றனர். எனவே, விடுமுறை நாட்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

Tags : bike race ,Chennai ,racers ,Bangalore National Highway Bike , bike racers,accidents ,Chennai,bengaluru ,National highways
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...