×

தனியார் மயமாக்கப்பட்ட நிலையில் அணை, ஏரிகளுக்கு மதகுகள் தயாரிக்க வாங்கிய இயந்திரங்களை ஏலம் விட முடிவு

* முதன்மை தலைமை பொறியாளரிடம் ஒப்புதல் கேட்டு கடிதம் * பொதுப்பணித்துறையில் சர்ச்சை

சென்னை: தனியார் மூலம் மதகுகள் வாங்கப்பட்டு வரும் நிலையில், மதகுகள் தயாரிக்க வாங்கப்பட்ட இயந்திரங்களை விற்பனை செய்ய பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் 89 அணைகள், 14,098 ஏரிகள் உள்ளது. இந்த அணைகள் மற்றும் ஏரிகளுக்கு புதிதாக ஷட்டர் தயாரிப்பது மற்றும் அதற்கு தேவையான போல்டு உட்பட அனைத்து உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக பொதுப்பணித்துறையில் அணை பாதுகாப்பு இயக்ககத்தின் கீழ் பணிமனை மற்றும் பண்டகசாலை இயங்கி வருகிறது. சென்னை தங்கச்சாலையில் உள்ள மின்ட்டில் இதற்கான அலுவலகம் 14 ஏக்கரில் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் புதிய ஷட்டர் தயாரிப்பது, அரசு முத்திரை அச்சு தயார் செய்வது உள்ளிட்ட பணிகள் நடந்தது. இதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டிப்ளமோ படித்த மெக்கானிக் பொறியாளர்கள், ஐடிஐ படித்த பிட்டர், வெல்டர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் தான் அணை, ஏரிகளில் ஷட்டரில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக சென்று சரி செய்வது, புதிதாக தயார் செய்யப்பட்ட ஷட்டரை பொருத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.


இந்நிலையில் புதிதாக ஷட்டர் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், பண்டகசாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் வேறு இடங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, எந்தவித வேலை நடக்காத நிலையில், அந்த பணிமனை பண்டக சாலை மூடப்பட்டது. இந்த நிலையில் பண்டகசாலையில் மதகுகள் தயாரிப்பதற்கென பல நூறு கோடி செலவில் இயந்திரங்கள் வாங்கப்பட்டது. தற்போது பண்டகசாலை மூடப்பட்ட நிலையில் அந்த பண்டகசாலை இயங்கி வந்த இடத்தில் 5 ஏக்கர் ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பண்டகசாலையில் உள்ள இயந்திரங்கள் பயன்படாமல் உள்ளதால், அந்த இயந்திரங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்களை ஏலம் விடுவது தொடர்பாக ஒப்புதல் கேட்டு முதன்மை தலைமை பொறியாளருக்கு அணைகள் இயக்ககம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு, ஒப்புதல் கிடைத்தவுடன் டெண்டர் விடப்பட்டு இயந்திரங்கள் ஏலம் விடப்படவுள்ளது. பண்டகசாலை மூலம் மதகுகள் தயாரிக்கும் இயந்திரங்கள் ஏலம் விட முடிவு செய்து இருப்பதற்கு பொதுப்பணித்துறையில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : dam ,lakes ,privatization ,clergy manufacturer , Private privatization, dam, lakes, clergy manufacture, purchase machines, bidding, results
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...