×

நாட்டுக்கு எதிராக மக்களை தூண்டியதாக நடிகர் பர்ஹான் மீது போலீசில் புகார்

மும்பை: நாட்டுக்கு எதிராக போர் செய்ய தூண்டியதாக பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குனருமான பர்ஹான் அக்தருக்கு எதிராக ஐதராபாத்தில் உள்ள சைதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பர்ஹான் அக்தர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், இனியும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் ஒன்று திரண்டு  போராடுவோம் (கடந்த 19ம் தேதி நடந்த போராட்டம்) என்று கூறியிருந்தார்.அவரது இந்த கருத்தும், போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததும் தேசத்துரோகம் என்றும் நாட்டுக்கு எதிராக பர்ஹான் அக்தர் போர் தொடுத்திருப்பதாகவும் மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த இந்து சங்கதன் என்ற அமைப்பின் தலைவரும் வழக்கறிஞருமான கருணா சாகர், சைதாபாத் போலீஸ் நிலையத்தில் பர்ஹான் அக்தருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரில், ‘‘பர்ஹான் அக்தர் டிவிட்டரில் தெரிவித்த கருத்து தேசத்துரோகம் ஆகும். அவரது கருத்து மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியது. அவர் நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க முஸ்லிம்கள், மூன்றாம் பாலினத்தார், நாத்திகர்கள் மற்றும் தலித்களை தூண்டிவிட்டுள்ளார். எனவே பர்ஹான் அக்தருக்கு எதிராக இ.பி.கோ. 121, 121(ஏ), 120(பி), 505 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.


Tags : Parhan ,country , People, actor Burhan
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...