×

யூடியூப் சேனலில் மதிப்பீடு செய்து ஆண்டுக்கு 185 கோடி சம்பாதிக்கும் சிறுவன்: 3வது இடத்தில் சிறுமி

நியூயார்க்: சிறுவர்களின் பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களை தனது ‘யூடியூப்’ சேனலில் மதிப்பீடு செய்து, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.185 கோடியை அமெரிக்க சிறுவன் ரியான் சம்பாதித்து வருகிறான். டிவி சேனல்களைப்போல் ‘யூடியூப்’ சேனல்களை ஆரம்பித்து அதன் மூலம் பணம் ஈட்டுபவர்கள் அதிகளவில் உள்ளனர். எவ்வளவுக்கு எவ்வளவு பார்வையாளர்களை ஈர்க்கிறோமோ அந்த அளவுக்கு பணமும் கொட்டும். இதன் காரணமாகத்தான்  ‘யூடியூப்’பில் ஏராளமான சமையல் வீடியோக்கள், சினிமா விமர்சனங்கள், அரசியல் நையாண்டிகள் என்று பல வலம் வருகின்றன. இந்நிலையில், உலகளவில் ‘யூடியூப்’ சேனல் மூலம் அதிகளவில் சம்பாதிப்போரின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில், ஆச்சரியமான விஷயம், பட்டியலில் முதல் இடத்தில்  இருப்பது ஒரு சிறுவன். அவன், அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி (8). இவன் தனது ‘யூடியூப்’ சேனல் மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.184 கோடி சம்பாதித்து முதல் இடத்தை பிடித்துள்ளான்.

இவன் பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் மீது பெரும் ஆர்வம் கொண்டவன். அதை அக்குவேறு, ஆணிவேராக பிரித்து மீண்டும் இணைத்துவிடுவான். இவனது திறமையை பார்த்த பெற்றோர், அவனது செயலையே ஒரு ‘யூடியூப்’  சேனலாக்கிவிட்டனர். அதாவது, ‘ரியான் வேர்ல்டு’ என்ற பெயரில் இவர்கள் சேனல் ஒன்றை உருவாக்கி, அதில் சந்தையில் புதிதாக வரும் பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களின் செயல்பாடுகளை ரியான் ஆய்வு செய்து பேசுவான். அது  உலக அளவில், பெரும் புகழ் அடைந்தது. 2015ம் ஆண்டு முதல் இவனது ‘யூடியூப்’ சேனல் இயங்கி வருகிறது. தற்போது இந்த சேனலுக்கு 2 கோடியே 30 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். இவனது வீடியோக்களை உலகம் முழுவதும் மக்கள் பார்த்து வருவதால், பல வீடியோக்கள் 100 கோடி பார்வைகளையும் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவனுக்கு அடுத்தபடியாக, ரஷ்யாவைச் சேர்ந்த 5 வயது சிறுமி அனஸ்டாசியா ரத்ஜின்ஸ்காயா ரூ.128 கோடி சம்பாதித்து 3வது இடத்தில் உள்ளார்.



Tags : YouTube Channel, boy, girl
× RELATED பர்கினோ பாசோவில் அரசுக்கு எதிராக...