×

சில்லி பாயின்ட்...

* ‘டென்னிஸ் எல்போ’ பாதிப்பு காரணமாக முழங்கையில் அறுவைசிகிச்சை செய்துகொள்ள நேரிட்டபோது மனதளவில் மிகவும் உடைந்துபோனேன். மீண்டும் களமிறங்கி விளையாட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என இறைவனிடம்  வேண்டாத நாளே இல்லை. அத்தனை மோசமான பாதிப்பு அது. இதில் இருந்து மீண்டு வர மனைவி மற்றும் நண்பர்களின் ஆதரவும் ஊக்கமுமே காரணம் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
* 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காகத் தயாராகி உள்ள தேசிய ஸ்டேடியத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஜமைக்கா தடகள நட்சத்திரம் உசேன் போல்ட் விழாவில் பங்கேற்றதுடன் ஸ்டேடியத்தை சுற்றி ஓடிவந்து ரசிகர்களை  மகிழ்வித்தார்.
* பிக் பாஷ் டி20 லீக் தொடரில், கான்பெராவில் நேற்று நடந்த போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மோதின. அடிலெய்டு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய சிட்னி  தண்டர் 4.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்த நிலையில், காட்டுத் தீ காரணமாக புகை சூழ்ந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
* டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு கூட்டணிதான் உலகிலேயே சிறந்ததாக உள்ளது என்று தென் ஆப்ரிக்க வேகம் டேல் ஸ்டெயின் பாராட்டி உள்ளார்.



Tags : Sachin , Master batsman, Sachin, elasticity
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!!