×

சேலத்திலிருந்து தாழையூத்து வந்த லாரி கிணற்றில் விழுந்து மூழ்கியது

சங்கர்நகர்: சேலத்திலிருந்து தாழையூத்து வந்த லாரி கிணற்றில் விழுந்து மூழ்கியது. இதில் 25 ஆயிரம் கிலோ சீனி மூடைகள் தண்ணீரில் நனைந்து வீணாகியது.
சேலத்திலிருந்து நெல்லை தாழையூத்தில் உள்ள மாடர்ன் ரைஸ் மில்லுக்கு 25 டன் (25 ஆயிரம் கிலோ) சீனி மூடைகளை ஏற்றிக் கொண்டு லாரி புறப்பட்டது. லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த வையாபுரி என்பவர் மகன் பால்முருகன் (31) ஓட்டினார்.

இன்று அதிகாலை 4 மணி அளவில் மாடர்ன் ரைஸ் மில் அருகில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையோரத்தில் லாரியை பாலமுருகன் நிறுத்தினார். அப்போது அங்கு இருந்த சகதியில் லாரியின் பின் டயர் சிக்கியது. லாரியை மீட்க மாடர்ன் ரைஸ் மில்லில் இருந்து மீட்பு வாகனத்தை கேட்பதற்காக டிரைவர் பாலமுருகன் சென்றார்.

அதற்கு மாடர்ன் ரைஸ் மில் நிறுவனத்தினர், மீட்பு வாகனத்திற்கு பதிலாக மற்றொரு லாரியில் மூடைகளை ஏற்றிக்கொண்டு வரும்படி அறிவுறுத்தினர். இதற்கிடையே புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்டிருந்த சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி, சகதியில் வழுக்கி பக்கவாட்டில் இருந்த பாழுங்கிணற்றுக்குள் விழுந்து மூழ்கியது. இதில் லாரியில் இருந்த 25 ஆயிரம் கிலோ சீனி மூடைகளும் நனைந்து வீணாகியது. இதுகுறித்து தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Tags : well ,Salem ,Larry , Larry
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!