×

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் விடிய விடிய மழை: 2400 கனஅடிநீர் திறப்பால் தாமிரபரணியில் மீண்டும் வெள்ளம்

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 264 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணையில் 2400 கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு  வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் இறுதியில் தொடங்கியது. இன்று வரை இடைவிடாமல் பெய்கிறது. மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வடகிழக்கு பருவமழை பொழிவை தந்துள்ளது. கடந்த வாரம் அணைப்பகுதி தவிர மற்ற இடங்களில் மழை அளவு சற்று குறைந்தது. இந்த நிலைியில் நேற்று முதல் மீண்டும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்துவருகிறது. நேற்று பிற்பகல் சாரல் மழையாக பல இடங்களில் பெய்தது. இரவு 7 மணிக்கு மேல் தொடங்கி தொடர்ந்து விடிய விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று காலை 7 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 264 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக ராதாபுரத்தில் 69 மிமீ மழை பெய்தது. மணிமுத்தாறில் 30.20, அம்பை 28.60, சேரன்மகாதேவி 20.20, நாங்குநேரி 47, பாளை 19.40, பாபநாசம் 35, நெல்லை 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஏற்கனவே நிரம்பியுள்ள பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 2 ஆயிரத்து 440.79 கனஅடிநீர் வந்து கொண்டிருந்

இதனால் அணையில் இருந்துவினாடிக்கு 2 ஆயிரத்து 461.89 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் மழை நீர் மற்றும் பிற அணைகளில் நீரும் வருவதால் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். சேர்வலாறு அணைப்பகுதியில் 42 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 113.40 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு ஆயிரத்து 462 கனஅடிநீர் வருகிறது. அணையில் இருந்து 315 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.வடக்கு பச்சையாறு அணைக்கு 272.79 கனஅடிநீரும், நம்பியாறு அணைக்கு 150.64 கனஅடிநீரும், கொடுமுடியாறு அணைக்கு 121 கனஅடிநீரும் வருகிறது. தென்காசி மாவட்டத்தில் கடனா அணைபகுதியில் 6 மிமீ, ராமநதி 15, கருப்பாநதி 2.5, குண்டாறு 8 மிமீ, அடவிநயினார் 2 மிமீ, ஆய்குடி 4.80, சங்கரன்கோவில் 5, செங்கோட்டை 8, சிவகிரி 3.50, தென்காசி 6.20 மிமீ மழை பெய்துள்ளது. கருப்பாநதி, குண்டாறு தொடர்ந்து நிரம்பி வழிகின்றன. அடவிநயினார் அணை நீர் இருப்பு 126.25 அடியாக உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் தூத்துக்குடியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மதியம்  சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் முக்கியமான சாலைகளில் மழைநீர் தேங்கியது. ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விடிய விடிய மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வரும் நிலையில் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள் தற்போது மீண்டும் மழையால் நிம்மதி இழந்துள்ளனர். இந்த மழை வெள்ள நீர் மீண்டும் தேங்கி அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது. தொடர்ந்து மேலும் இருநாட்கள் மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே வெள்ளநீர் பாதிப்பில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்: திருச்செந்தூர்- 89 மிமீ, காயல்பட்டினம்-69, குலசேகரன்பட்டினம்- 98, விளாத்திகுளம்- 28,காடல்குடி- 13, வைப்பார்-15, சூரங்குடி-2, கோவில்பட்டி-5, கழுகு
மலை 3, கயத்தாறு- 14,  ஓட்டப்பிடாரம்- 27, மணியாச்சி-53, எட்டயபுரம்- 7, சாத்தான்குளம்- 44.6, வைகுண்டம்- 31, தூத்துக்குடி- 34.5 மிமீ. மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு:566.10 மிமீ, சராசரி அளவு- 29.79 மிமீ

Tags : Rainfall ,Paddy ,Tenkasi ,floods ,Thoothukudi Thamirabarani , Thamirabarani, floods
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...