×

நோயால் முருங்கை பீன்ஸ் விளைச்சல் பாதிப்பு

வருஷநாடு: மயிலாடும்பாறை பகுதியில் மஞ்சள் நோய் தாக்கத்தால் முருங்கை பீன்ஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டம், மயிலாடும்பாறை பகுதியில் தங்கம்மாள்புரம், உப்புத்துறை, கருப்பையாபுரம், மூலக்கடை, சோலைதேவன்பட்டி, பின்னதேவன்பட்டி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் முருங்கை பீன்ஸ் பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், முருங்கை பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்கியுள்ளது. இதனால் முருங்கை பீன்ஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து கடமலைக்குண்டு தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மஞ்சள் நோய் பாதிப்பிலிருந்து முருங்கை பீன்ஸ் காய்களை பாதுகாக்க, டைட்டேனியம் எம் 45 என்ற பூச்சிமருந்தையும், பெவிஸ்டின் என்ற பவுடரையும் தெளிக்க வேண்டும்’’ என்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ‘‘முருங்கை பீன்ஸ் விளைச்சல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Tags : Drumstick, beans
× RELATED 61 வயதில் நீட் எழுதிய மாஜி வங்கி அதிகாரி