×

என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவு

ஐதராபாத்: என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் 4 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யவும் தெலங்கானா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 4 பேரின் உடல்களும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதை அடுத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

கால்நடை பெண் மருத்துவரை எரித்துக்கொன்றது தொடர்பாக கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகிய 4 பேரை ஐதராபாத் காவல்துறை கைது செய்தது. விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், இந்த 4 பேரையும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற போது, குற்றவாளிகள் தப்பியோட முயன்றதால் போலீசார் அவர்களை சுட்டுக்கொன்றனர்.


Tags : Hyderabad ,encounter ,persons ,physician , Hyderabad, female physician, burnout, encounter, post mortem
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...