×

இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் மசோதா நிறைவேற்றம்

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில்  650 இடங்களுக்கு  தேர்தல் நடந்தது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாக இருந்தது. கன்சர்வேட்டிவ் கட்சி 337 இடங்களில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் மசோதாவை, சில திருத்தங்களுடன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2020 ஜனவரி 3ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, இங்கிலாந்து முறைப்படி வெளியேறும் என தகவல் தெரிவிக்கின்றன.


Tags : Brexit ,exit ,European Union ,The Exit ,UK Parliament , UK, Parliament, European Union,, Brexit bill
× RELATED நோட்டோவிற்கு போதிய நிதி ஒத்துக்கீடு...