×

காஷ்மீரில் சிக்கித் தவிக்கும் தமிழக லாரி ஓட்டுனர்களை மீட்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு காஷ்மீரில் இருந்து ஆப்பிள் ஏற்றி வருவதற்காக சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 450க்கும் மேற்பட்ட சரக்குந்துகள் கடந்த நவம்பர் 10ம் தேதி புறப்பட்ட. அவை ஆப்பிள் ஏற்றிக் கொண்டு கடந்த 7ம் தேதி காஷ்மீரின் சோபியான் பகுதியிலிருந்து புறப்பட இருந்த நேரத்தில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது. காஷ்மீரில் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், ராணுவத்தினரின் உதவியுடன் சாலைகளில் பனி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. எனினும் போக்குவரத்தை முழுமையாக சீரமைக்க முடியாத நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை மட்டும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற அனுமதித்த காஷ்மீர் அரசு, சரக்குந்து உள்ளிட்ட வாகனங்கள் வெளியேற அனுமதிக்கவில்லை.

தமிழகத்திலிருந்து சென்ற 450க்கும் மேற்பட்ட சரக்குந்துகளின் ஓட்டுனர்கள், உதவியாளர்கள் என 900க்கும் மேற்பட்டோர் காஷ்மீரில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் தமிழகத்திலிருந்து புறப்பட்டுச் சென்று 40 நாட்களுக்கு மேலாகிவிட்டதால், எடுத்துச் சென்றிருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டன. கடந்த 13 நாட்களுக்கும் மேலாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சரக்குந்துகளை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

Tags : lorry drivers ,truck drivers ,Kashmir ,Anumani ,Indian , Truck drivers in Kashmir, Tamil Nadu,anbumani
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!