×

நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள மகனை மீட்க கோரி தாய் மனு

சென்னை: கர்நாடகா மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் 2003ம் ஆண்டு சேர்ந்தார். அங்கு அவருக்கு பிராணாசாமி என பெயர் சூட்டப்பட்டது. சமீபத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சீடர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து,  முருகானந்தத்தை சந்திக்க அவரது தாய் அங்கம்மாள் பார்க்க பிடதி ஆசிரமத்தினர்  அனுமதி வழங்கவில்லை. சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.   இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு ஈரோடு காவல்துறையினர் மற்றும் நித்தியானந்தாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.


Tags : Nityananda, son , mother
× RELATED சம்பளம் முழுவதையும் குடித்ததால் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது