×

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3 ஆக பதிவு

டெல்லி: டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஸ்ரீநகர், மதுரா, சண்டிகர் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலையை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலை பகுதியில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 190 கிலோமீட்டர் ஆழத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3-ஆக பதிவானது.

இதையடுத்து டெல்லி, என்.சி.ஆர். எனப்படும் தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் சில வடமாநிலங்களில் திடீர் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் வீடுகளில் அலங்கார விளக்குகள், மின்விசிறிகள் உள்ளிட்டவை ஆடின. இந்த நில அதிர்வு பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின.

Tags : Earthquake ,parts ,Richter ,Delhi , Earthquake
× RELATED அந்தமான் அருகே லேசான நிலநடுக்கம்