×

அரவக்குறிச்சி பகுதியில் அதிவேக பைக் ரேஸ்களால் பொதுமக்கள் அச்சம், பீதி

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி பகுதியில் இளைஞர்கள் அதிவேகமாக பைக்குகளை ஓட்டுகின்றனர். இதனால் அப்பாவி பொது மக்கள் விபத்துக்குள்ளாகின்றனர். இதனை காவல்துறையினர் கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் இளைஞர்கள் மத்தியிலும் அதிவேகமாக பைக் ஓட்டுவது பரவி வருகின்றது.அரவக்குறிச்சி பகுதியில் இளைஞர்கள் பலர் அதிக சிசி திறன் கொண்ட இன்ஜின் உள்ள பைக்குகளில் நகரத்திலும் கிராம சாலைகளிலும் இளங் கன்று பயமறியாது என்பது போல அதிவேகமாக பைக்கை ஓட்டி வருகின்றனர். இதனால் அப்பாவி பொதுமக்கள் விபத்தில் சிக்கி கை கால் உடைந்து காயமடைகின்றனர். குக்கிராம சாலைகளில் பைக் ரேஸ் நடத்துகின்றனர்.

அரவக்குறிச்சி கடைவீதி உள்ளிட முக்கிய சாலையில் அதி வேகமாக செல்லுவதால் நடந்து செல்லும் அப்பாவி முதியவர்கள் பலர் காயமடைகின்றனர். இதனால் விபத்துக்கள் நடந்து பதைபதைக்க வைக்கிறது என்று அரவக்குறிச்சி பகுதி மக்கள் அஞ்சுகிறார்கள் இதுபற்றி இப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: நகர தெருக்களில் பெரிய பெரிய பைக்குகளில் இளைஞர்கள் அதிவேகமாகச் செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தெருக்களில் நடக்க வேண்டியுள்ளது.

 அதுமட்டுமல்லாமல் அரவக்குறிச்சி சுற்றுவட்டார கிராம சாலையில் இளைஞர்கள் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லும் போட்டியில் ஈடுபடுகின்றனர். ஒரு பைக்கில் 2 முதல் 3 அல்லது நான்கு நபர்கள் என பயணம் செய்வது மட்டுமன்றி 4, 5 பைக்குகளில் ஒரே நேரத்தில் புறப்பட்டு பயங்கர சத்தத்துடன் ரேஸ் நடத்துகின்றனர். இவ்வாறு அதிவேகமாக காதை பிளக்கும் பயங்கர சத்தத்துடன் செல்வதால் சாலைகளில் போகும் ஆடு, மாடுகள், வயதான முதியவர்கள், குழந்தைகள் பள்ளி மாணவ, மாணவிகள் சாலைகளில் செல்ல முடியவில்லை.

எப்போது இளைஞர்கள் பைக்குகளில் வருவார்கள், யார் மீது மோதுவார்கள் என்ற அச்சத்துடனேயே பொதுமக்கள் செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் எனவே, அரவக்குறிச்சி காவல் துறையினர் இப்பகுதிகளில் அடிக்கடி வாகனச்சோதனை மேற்கொண்டு அதிவேகமாக செல்லும் பைக்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரளவில் சாலை விழிப்புணர்வு பேரணி என்றில்லாமல், பள்ளி, கல்லூரிகளில் அறிவுறுத்தல் கூட்டங்கள் நடத்தியும், பைக்கில் அதிவேகமாகச் செல்லும் இளைஞர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்றனர்.

Tags : area ,bike races ,Aravakurichi ,Races ,Aravankurichi Area , Aravankurichi , karur, speed bike, bike racers,afraid
× RELATED அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில்...