×

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் அமித்ஷா வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் மகளிர் அணியினர் கைது


டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடியதால் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மகள் சர்மிஷ்ட முகர்ஜியும் கைது செய்யப்பட்டார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒருபகுதியாக டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி அமித்ஷாவின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். தடையை மீறி முன்னேற முயன்றதால் காங்கிரஸ் மகளிர் அணி தலைவரான சர்மிஷ்ட முகர்ஜி உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை காலையில் வழக்கம் போல் தொடங்கினாலும் பின்னர் ஆங்காங்கே போராட்டம் வெடித்ததால் மீண்டும் பல இடங்களில் ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

கிழக்கு டெல்லியில் பெரும்பாலான இடங்களில் 144 தடையாணை அமலில் இருப்பதுடன் இணையசேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மகளிர் அணி தலைவரான சர்மிஷ்ட முகர்ஜி தெரிவித்ததாவது, நாடாளுமன்றத்தில் குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது. முதலில் டெல்லியில் நிலைமை சரியாக இல்லை. காங்கிரஸ் தூண்டுதலால் போராட்டங்கள் நடப்பதாக ஆளுங்கட்சியினர் கூறுவது தவறு என் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கையாண்ட பிறகே வன்முறை வெடித்துள்ளது. 144 தடை உத்தரவுடன், செல்போன், இணையதள சேவைகளை அரசு முடக்கியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அமைச்சர் அமித்ஷா சிந்தித்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.


Tags : women ,Congress ,house ,residence ,Amitesha ,Delhi ,Delhi Amit Shah , Citizenship Amendment, Delhi, Amit Shah, Siege, Congress Women's Team, Arrested
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ