×

வெங்காய தாமரை மண்டி கிடக்கும் நேமம் வடிகால் வாய்க்காலை விவசாயிகளே தூர்வாரினர்

திருத்துறைப்பூண்டி : வெங்காய தாமரை மண்டிக்கிடக்கும் நேமம் வடிகால் வாய்க்காலை விவசாயிகளே தூர்வாரினர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் ஊராட்சி நேமம், இளநகர் கிராமத்தில் 500 ஏக்கர் சாகுபடி நிலம் உள்ளது.
விவசாய நிலங்களில் மழை வெள்ள நீர் வடிய வேண்டிய நேமம் வடிகால் வாய்கால் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகி விட்டது. கடந்த ஆண்டு தாக்கிய கஜா புயலில் வடிகால் வாய்காலில் விழுந்த மரங்கள் எதுவும் அகற்றபடவில்லை இதனால் தண்ணீர் வடியாமல் உள்ளது. நேமத்தில் இருந்து நெடும்பலம் செல்லும் 12 கிலோ மீட்டர் வடிகால் வாய்கால் தூர்வார பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் விவசாயிகள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசு தூர்வாரும் என எதிர்பார்த்தால் எதுவும் நடக்காது. விவசாயிகளுக்கு பெரும் இழப்புதான் ஏற்படும். தற்போது சம்பா பயிர் கதிர்வரும் வயல்களில் தண்ணீர் வடியாமல் பயிர்கள் அழிகி வரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் நேமம் வடிகால் வாய்கால்களில் மண்டிக் கிடக்கும் வெங்காய தாமரை உள்ளிட்ட செடிகளை 50 மேற்பட்ட விவசாயிகள் கிராம கமிட்டி தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வெங்காய தாமரை மண்டி கிடக்கும்.


Tags : Peasants ,Nemam ,Onion Lotus Mandi ,Thiruthuraipoondi , thiruthuraipoondi,Farmers ,water way ,Onion Lotus Mandi
× RELATED வேளாண் பொருட்கள் இறக்குமதியால்...