8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அரபி பாடசாலை ஆசிரியர்: போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே அரபி படிக்க வந்த 8 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்த அரபி பாடசாலை ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தவ்பீக் அல் காதி (38). விளப்பில்சாலை பகுதியில் பள்ளி வாசலையொட்டி உள்ள அரபி பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அரபி படிக்க வந்த 8 வயது மாணவியை மிரட்டி கடந்த 6 மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். ஆசிரியரின் தொல்லையை பொறுக்க முடியாமல் சிறுமி தவித்து வந்துள்ளார். தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஆசிரியர் மீது மலையின்கீழ் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, பலாத்காரம் செய்யப்பட்டதும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தவ்பீக் மீது ேபாக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார். தற்போது அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: