×

வாக்காளர்களுக்கு குழப்பத்தை உண்டாகும் தென்னை மர சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்திடம் தமாகா மனு

சென்னை: வாக்காளர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கும் என்பதால் தென்னை மர சின்னத்தை எந்த கட்சிக்கும் ஒதுக்கக்கூடாது என்று தமாகா நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் ஆட்சேபனை மனு அளித்தனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9ம்தேதி தொடங்கி 16ம்தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தமாகா போட்டியிடுகிறது. கூட்டணியில் தமாகாவுக்கு 3 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு நிறுத்தப்படும் தமாகா வேட்பாளர்கள் ெபாது சின்னத்தில் போட்டியிடும் வகையில் சைக்கிள் சின்னம் கேட்டு மாநில தேர்தல் ஆணையத்தை அணுகியது.

ஆனால், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் சைக்கிள் சின்னத்தை தமாகாவுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட தென்னந்தோப்பு சின்னத்தை ஒதுக்கீடு செய்தது. தமாகா வேட்பாளர்கள் அனைவரும் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதற்கிடையில், தென்னை மரம் சின்னம் கேட்டு அமமுக முயற்சி செய்வதாக தமாகாவினருக்கு தகவல் கிடைத்தது. அமமுகவுக்ேகா அல்லது வேறு கட்சிகளுக்கோ தென்னை மரம் சின்னம் ஒதுக்கினால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமாகாவினர் கருதினர். இதனால் தமாகாவுக்கான வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது. எனவே தென்னை மர சின்னத்தை வேறு எந்த கட்சிக்கும் ஒதுக்கக்கூடாது என்று தமாகா மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், துணை தலைவர் கோவை தங்கம் ஆகியோர் மாநில தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து ஆட்சேபனை மனு கொடுத்தனர்.

Tags : No one ,voters ,Tamaka ,Election Commission , Petition to the Election Commission, Tamaka
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...