பிரச்னைக்கு வன்முறை தீர்வல்ல: நடிகர் ரஜினி டிவிட்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் திரும்ப பெறக்கோரியும் அஸ்ஸாம், உத்திரபிரதேசம், கர்நாடகா, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதுவரை மூன்று பேர் இறந்துள்ளனர். பல பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. போராடியவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு  இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: