×

மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்றதால் தாயின் கண்ணெதிரே மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை

மதுரை: மதுரை, கோரிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் புது மண்டபத்தில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மதினா பேகம். மகள் ரிஷ்வானா பானு (22). இவருக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் ரிஷ்வானா பானு விவாகரத்து பெற்றார். இதற்கிடையே ரிஷ்வானா பானுவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். பல இடங்களில் பார்த்தும் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எனக் கூறி கொண்டு வந்துள்ளார். இதனால் தந்தை, மகள் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று மதியம் மூவரும் வீட்டில் இருக்கும்போது, மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.  ஆத்திரத்தில் முகமது இஸ்மாயில் வீட்டில் இருந்த கத்தியால் ரிஷ்வானா பானுவை சரமாரியாக குத்தி கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பினார்.
இதனை பார்த்துக் கொண்டிருந்த தாய் மதினா பேகம் மயங்கி கிழே விழுந்தார். இதுகுறித்து  தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து, முகமது இஸ்மாயிலை தேடி வருகின்றனர்.

Tags : groom , father , who killed , his daughter , eyes of her mother
× RELATED ஆண்களுக்கும்...