×

பொதுப் பிரச்னைக்காக நடத்தப்படும் பேரணியில் கட்சிகள், விவசாயிகள், வணிகர் சங்கம், திரைத்துறையினர் பங்கேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: தமிழகத்தில் வருகிற 23ம் தேதி நடைபெறும் பேரணியில் பல்வேறு  அரசியல் கட்சிகள், விவசாயிகள், வணிகர்  சங்கங்கள், திரைத்துறையினர் பங்கேற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமூக நல்லிணக்கம்,  மதச்சார்பின்மை, ஒற்றுமை ஆகிய உன்னத தத்துவங்களுக்கு முரணான  வகையில் மத்திய பாஜக அரசு இந்தக் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு  வந்துள்ளது. அனைத்து மதத்தவரும் வரலாம் என்றால் ஏன் இசுலாமியர்  புறக்கணிக்கப்படுகிறார்கள், அண்டை நாட்டவர் வரலாம் என்றால் அதில் ஈழத்தமிழர்  புறக்கணிக்கப்பட்டது எதனால் என்ற கேள்வியை நாம் எழுப்பி வருகிறோம்.

கடந்த 18ம் தேதி சென்னை அண்ணா  அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி  வருகிற 23ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு  விடப்பட்டுள்ளது. குடிபறிக்கும் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறும் வரையில்  நமது போராட்டம் தொடர வேண்டும்.கட்சி எல்லைகளை கடந்து, மதம், சாதி, மாநிலப் பாகுபாடுகள் கடந்து  இப்போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே இச்சட்டத்தை திரும்பப்  பெற வைக்க முடியும். எனவே, தாங்களும், தங்கள் அமைப்பும் இப்பேரணியிலும்  அதைத் தொடர்ந்து நடக்க இருக்கும் போராட்டங்களிலும் பங்கெடுத்து தங்களது  ஜனநாயக் குரலை எழுப்புமாறு அழைப்பு விடுக்கிறேன். ஒற்றைக் குரலில் ஒற்றுமை காட்டுவோம். ஒற்றுமைக் குரலால் வெற்றியை ஈட்டுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாளமுத்து நடராஜர் மாளிகை முன்பு தொடக்கம்
குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு பேரணி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 23ம் தேதி நடக்கிறது. இந்த பேரணியில் 11 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த பேரணி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜர் மாளிகை அருகே அன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அங்கு தொடங்கும் பேரணி ராஜரத்தினம் மைதானம் அருகில் முடிவடைகிறது. அங்கு தலைவர்கள் கண்டன உரையாற்றுகின்றனர் என்று கூறப்படுகிறது.

Tags : Parties ,traders ,peasants ,Traders' Association ,rally ,MK Stalin , Invite parties, farmers, traders' association, film industry to participate in rally
× RELATED சாத்தான்குளம் வியாபாரிகள் பலியான...