×

விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

வேளச்சேரி: விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம், குப்பம்மாசத்திரம், முல்லை நகர், கற்பக விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலநாதன். இவரது மகன் பிரபுநாதன் (25). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 15ம் தேதி மேடவாக்கத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு, நண்பர் தங்கராஜுடன் பைக்கில் புறப்பட்டார். மேடவாக்கம் பிரதான சாலையில் சென்றபோது, பைக்கின் டயர் திடீரென பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்த பைக், சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் பிரபுநாதன் படுகாயமடைந்தார். அவரை மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபுநாதன் கோமா நிலைக்கு சென்றார்.  அவர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதால், உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோரும், உறவினர்களும் முன்வந்தனர். இதையடுத்து பிரபுநாதனின் இதயம், இதய வால்வுகள் மற்றும் 2 கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.


Tags : plaintiff ,accident , Donate coma, body organs
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...