×

சபரிமலை, பழநி கோயில் பக்தர்கள் வசதிக்காக பிப்.9 வரை மேல்மருவத்தூரில் ரயில்கள் ஒரு நிமிடம் நிறுத்தம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை:  ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டிச் செல்வோர் மற்றும் பழநி கோயில் தைப்பூசத் திருவிழாற்கு செல்லும் பக்தர்களுக்காக கீழ்க்கண்ட வழித்தடங்களில் செல்லும் விரைவு ரயில்கள், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வீராசுவாமி தெரிவித்துள்ளார். நின்றுசெல்லும் ரயில்கள் விபரம்:

* சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் (வண்டி எண் 12635) டிச. 20 முதல் பிப். 9 வரை, மாலை 3 மணி 3 நிமிடத்திற்கு வந்து 3 மணி 4 நிமிடத்திற்கு புறப்படும். மறுமார்க்கத்தில் மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (வண்டி எண் 12636) டிச. 18 முதல் பிப். 9 வரை, முற்பகல் 12.44 மணிக்கு வந்து 12.45 மணிக்கு புறப்படும்.
* லோக்மான்ய திலக் டெர்மினல் - மதுரை விரைவு ரயில் (வண்டி எண் 11043) டிச. 20 முதல் பிப். 7 வரை, அதிகாலை 1.29 மணிக்கு வந்து, 1.30 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில், மதுரை - லோக்மான்ய திலக் டெர்மினல் விரைவு ரயில் (வண்டி எண் 11044) டிச. 21  முதல் பிப். 8 வரை, நள்ளிரவு 12.34 மணிக்கு வந்து 12.35 மணிக்கு புறப்படும்.
* சென்னை எழும்பூர் - செங்கோட்டை விரைவு ரயில் (வண்டி எண் 12661) டிச. 19  முதல் பிப். 9 வரை, இரவு 10.23 மணிக்கு வந்து 10.24 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில்,  செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை விரைவு ரயில் (வண்டி எண் 12662) டிச. 18  முதல் பிப். 8 வரை   அதிகாலை 3.59 மணிக்கு வந்து, 4 மணிக்கு புறப்படும்.
* சென்னை எழும்பூர் -  நாகர்கோவில் விரைவு ரயில் (வண்டி எண் 12667)   டிச. 26 முதல் பிப். 6 வரை, இரவு 8.13 மணிக்கு வந்து 8.14 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில், நாகர்கோவில் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்     (வண்டி எண் 12668) டிச. 20  முதல் பிப். 7 வரை,  அதிகாலை 3.19 மணிக்கு வந்து, 3.20 மணிக்கு புறப்படும்.
* ஹஸ்ரத் நிஜாமுதீன் - கன்னியாகுமரி விரைவு ரயில் (வண்டி எண் 12642) டிச. 21  முதல் பிப். 8 வரை, இரவு 7.48 மணிக்கு வந்து 7.49 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமாரி - ஹஸ்ரத் நிஜாமுதீன் விரைவு ரயில் (வண்டி எண் 12641) டிச. 20  முதல் பிப். 7 வரை, காலை 6.49 மணிக்கு வந்து, 6.50 மணிக்கு புறப்படும்.
* தாம்பரம் - திருநெல்வேலி அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண் 16191) டிச. 20  முதல் பிப். 9 வரை,  இரவு 11.53 மணிக்கு வந்து 11.54 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண் 16192) டிச. 19  முதல் பிப். 8 வரை,  காலை 5.39 மணிக்கு வந்து, 05.40 மணிக்கு புறப்படும்.
* மதுரை - சென்னை எழும்பூர் பாண்டியன் விரைவு ரயில்   (வண்டி எண் 12638) டிச.  19 முதல் பிப். 8 வரை, அதிகாலை 2.49 மணிக்கு வந்து, 2.50 மணிக்கு புறப்படும்.
* மதுரை - ஹஸ்ரத் நிஜாமுதீன் விரைவு ரயில் (வண்டி எண் 12651) டிச. 22  முதல் பிப். 9 வரை,  காலை 6.49 மணிக்கு வந்து 6.50 மணிக்கு புறப்படும்.
* மதுரை - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண் 22624) டிச. 19  முதல் பிப். 8 வரை,  காலை 5.19 மணிக்கு வந்து 5.20 மணிக்கு புறப்படும்.
* ராமேஸ்வரம் - புவனேஸ்வர் விரைவு ரயில் (வண்டி எண் 18495) டிச. 22 முதல் பிப். 9 வரை, இரவு 7.59 மணிக்கு வந்து 8 மணிக்கு புறப்படும்.

Tags : Southern Railway ,temples ,Sabaramalai ,Palani , Southern Railway , train stops, Sabaramalai ,Palani temples
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்