×

பெரியபாளையம் அருகே 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோமாரி நோய் தாக்கி 50 ஆடு, மாடு இறந்ததால் பீதி: இழப்பீடு வழங்க மக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதில் கிடைக்கும் வருமானம்தான் இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. தற்போது பருவநிலை மாற்றத்தினால் கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பெரியபாளையம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆடுகள், 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளது அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோய் பரவுவதை தடுக்க, கால்நடை துறை மூலம் ஆண்டு தோறும் தடுப்பூசி போடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கோமாரி நோய் தடுப்பூசி முறையாக போடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பேரண்டூர் கால்நடை அரசு மருத்துவமனையை நம்பி, கல்பட்டு, ஆவாஜிபேட்டை, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, மாளந்தூர், பேரண்டூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் உள்ளனர். இந்த பேரண்டூர் கால்நடை அரசு மருத்துவமனை தினமும் திறப்பதில்லை. அப்படியே திறந்தாலும், ஒரு மணி நேரத்தில் பூட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.

கோமாரி தாக்குதலால் ஆடு, மாடுகள் இறப்பு குறித்து தகவல் தெரிவித்தாலும் கிராமத்துக்கு வருவதில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால், மேற்கண்ட கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளும், மாடுகளும் இறந்தன. 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்துபோன கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து கல்பட்டு கிராமத்தை சேர்ந்த முனுசாமி, லட்சுமி தம்பதியினர் கூறுகையில், ‘எங்களுக்கு சொந்தமான 30 ஆடுகள் கோமாரி நோயினால் இருந்துள்ளன. இதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். கடன் மூலம் கால்நடை வாங்கி வளர்த்து வருகிறோம். தற்போது, இந்த நோயால் கால்நடைகள் இறந்ததால் உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

கடமைக்கு வரும் கால்நடை மருத்துவர்கள்
மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. இங்குள்ள மருத்துவர்கள் தினமும் காலை 8-12 மணி வரையும், மாலை 3-5 மணி வரையும் மருத்துவமனையை திறந்து வைத்திருக்க வேண்டும். மேலும், ஞாயிறு, 2ம் சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 8-12 மணி வரையில் மருத்துவமனை திறந்திருக்க வேண்டும். இதை, பேரண்டூர் உட்பட பல கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் கடைபிடிப்பதில்லை. கடமைக்கு காலை 10 மணிக்கு வந்து விட்டு, 11 மணிக்கு சென்று விடுகின்றனர். இதனால் ஆடு, மாடுகளுடன் வரும் விவசாயிகள், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

கால்நடை வளர்ப்போர் கூறுகையில், ‘மருத்துவர்களுக்கு, ஆபத்து கால உதவி தொகை, கிராமங்களுக்கு தடுப்பூசி போட சென்றால், போக்குவரத்து மற்றும் உணவு செலவும், கால்நடைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளுக்கு ஏற்றவாறு ஊக்கத்தொகை உள்ளிட்ட செலவினங்களை அரசு வழங்கி வருகிறது. இதையெல்லாம் பெற்று கொண்டு மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை. உயரதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை’ என்றனர்.

Tags : villages ,panic attack ,Periyapalayam , 10 villages ,Periyapayam h,coma, Goat ,cow, die
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு