×

பிரியமானவர்களை தேடிச் செல்லும் பரிசுகள்!

நன்றி குங்குமம் தோழி

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என்றாலே பரிசுகள்தான் நினைவுக்கு வரும். இயேசுகிறிஸ்துவின் பிறந்தநாள் மற்றும் புத்தாண்டை வரவேற்கவும் தங்களின் அன்பை பரிசுகள் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்வது வழக்கம். இப்போது எல்லாமே ஆன்லைன் என்றாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் விரும்பும் பரிசினை இருக்கும் இடத்தில் இருந்தே வாங்க ஆப்கள் வந்துவிட்டன. அப்புறம் என்ன... பரிசுகளை அளித்து புத்தாண்டினை கொண்டாடுங்கள்.

ஃபிளவர்ஸ் கேக்ஸ் ஆன்லைன் (Flowers Cakes Online)

மனசுக்குப் பிடித்தவர்களுக்கு பூக்கள், பரிசுகள் மற்றும் சிறப்பு விழாக்களுக்கான பரிசுகள் என நம் மனதிற்கு பிடித்த பரிசுகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்ய உதவும் ஆப்தான் ஃபிளவர்ஸ் கேக்ஸ் ஆன்லைன் ஆப்கள். இந்த ஆப் இந்தியா முழுதும் உள்ள அனைத்து முக்கிய நகரங்களில் செயல்படுகிறது. அதனால் இந்தியாவில் உங்கள் அன்பானவர் எங்கிருந்தாலும் அவர்களுக்கான பரிசினை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே சேரும்படி செய்ய உதவும்.

பூக்களில் பலவிதம் என்பதால் ரோஜா, லில்லி, கார்னேஷன், டெய்சி, பேர்ட் ஆப் பாராடைஸ், ஆர்கிட்ஸ்... இன்னும் பல பூக்கள் உள்ளன. இதனை மொத்தமாகவும், பொக்கேவாகவும், பாஸ்கெட் டிசைன் அல்லது பூச்சாடி என உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து தரப்படும். அதே போல் கேக்குகளும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப விரும்பிய சுவையில் ஆர்டர் செய்யலாம். சிலர் கேக், பூ உடன் ஏதாவது ஒரு பரிசு பொருளும் சேர்த்து அனுப்ப விரும்புவார்கள்.

அவர்களுக்கான தனி காம்போ வசதியும் உள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்கிறோம். சரியான நேரத்திற்கு சென்றடையுமா? என்ற கவலை வேண்டாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் நடு இரவு என்றாலும், இவர்கள் பரிசுகளை டெலிவரி செய்கிறார்கள்.

பர்த்டே கிஃப்ட்ஸ் (Birthday Gifts)


மகளுக்கோ, மகனுக்கோ, காதலருக்கோ, காதலிக்கோ அல்லது கணவன், மனைவி யாராக இருந்தாலும், பிறந்த நாள் வரும் போது அவர்களுக்கு என்ன பரிசு தரலாம் என்று நாம் குழம்பி போவது வழக்கம். இனி அந்த குழப்பம் தேவையில்லை. ஆண், பெண் யாராக இருந்தாலும், அவர்களுக்கான பரிசுகள் இங்கு பல சாய்ஸ்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப தேர்வு செய்யும் வசதியுள்ளது. அதனால் கடைக்குள் சென்று அங்கு நம்முடைய பட்ஜெட்டுக்கு இல்லை என்று குழம்ப வேண்டியதில்லை. இவை எல்லாம் ஆன்லைனில் இருப்பதால் தரமாக இருக்குமா என்று சந்தேகம் தோன்றலாம். அது குறித்த கவலையையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.

காரணம், ஒவ்வொரு பொருளும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து தேர்வு செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர். சில சமயம் பரிசினை தேர்வு செய்துவிடுவோம். ஆனால் அது நன்றாக இருக்கிறதா என்ற குழப்பம் ஏற்படும். அதற்கான தீர்வினையும் இவர்கள் வழங்குகிறார்கள். நீங்கள் தேர்வு செய்த பரிசினை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு அனுப்பி அவர்களிடம் ஒரு ஆலோசனை பெற்று பிறகு வாங்கலாம்.

வினி - கேக்ஸ், ஃபிளவர்ஸ், கிஃப்ட்ஸ் (Winni - Cakes, Flowers, Gifts)

இந்தியா முழுக்க உங்களின் அன்பானவர்களுக்கு கேக், பூக்கள் மற்றும் பரிசுகளை விரும்பும் நேரத்தில் அனுப்பி வைக்கலாம். வினி ஆப் மூலம் நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு உங்களின் பரிசு வந்து சேரும். இந்தியா முழுக்க இந்த ஆப் செயல்படுவதால் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் பரிசு உங்களின் அன்பானவர்கள் கைகளில் தவழும் என்பதில் சந்தேகமில்லை. இது மொபைல் ஆப் என்பதால், உங்கள் கைபேசியில் இருந்தே பரிசுகளை ஆன்லைன் முறையில் ஆர்டர் செய்யலாம்.

மேலும் இதற்கான கட்டணத்தை கிரெடிட் கார்ட், பேபால் அல்லது நெட் பேங்கிங் என அனைத்து வகையான ஆன்லைன் வசதிகளைக் கொண்டு கட்டணம் செலுத்தலாம். இந்த ஆப்பினை பயன்படுத்துவது மிகவும் சுலபம்.

முதலில் ஆப்பினை செல்போனில் டவுண்லோட் செய்யவும். பிறகு அதில் குறிப்பிட்டு இருக்கும் பரிசு பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். எப்போது எந்த நேரம் டெலிவரி செய்ய வேண்டும் என்று குறிப்பிட வேண்டும். அதே சமயம் உங்கள் அன்பானவர்களுக்கு சிறப்பு செய்தி அனுப்ப வேண்டும் என்றாலும் இதில் குறிப்பிடலாம். கட்டணம் செலுத்தினால் போதும், உங்கள் பரிசு உங்கள் விருப்பமானவர்களை சென்று அடையும்.

பிரின்ட்லாண்ட் (Printland)

பூக்கள், இனிப்புகள், சாக்லெட்டுகள் என பொதுவான பரிசுகள் தருவது வழக்கம். ஆனால் சிலர் இதை எல்லாம் தாண்டி தங்களின் அன்பு என்றும் நிலைத்து இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்காகவே பிரத்யேகமாக பரிசுகளை அவர்களின் விருப்பம் போல் பிரின்ட்லாண்ட் ஆப் மூலம் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். பெயருக்கு ஏற்ப நீங்கள் விரும்பும் புகைப்படங்களை ஆப்பில் அப்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களின் புகைப்படம் எதில் பதிவு செய்யவேண்டும் என்று குறிப்பிட்டால் போதும்.

அதாவது செல்போன் கவர், மக், கடிகாரம்... என விரும்பும் பொருட்களில் பதிவு செய்து பரிசாக அளிக்கலாம். இது தவிர டீஷர்ட், சாவி கொத்துகள், பேக்ஸ், லேப்டாப்பிலும் புகைப்படங்களை பிரின்ட் செய்யும் வண்ணம் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்புறம் என்ன கிளிக் செய்யுங்கள், விரும்பும் பொருட்களில் புகைப்படங்களை பதிவு செய்யுங்கள்.

சர்பிரைஸ் இந்தியா

பரிசுகள் என்றாலே சர்பிரைஸ்தான். பிறந்த நாள், திருமண நாள், காதலர் தினம், தீபாவளி, ராக்கி பண்டிகை, அன்னையர் தினம்... என எந்த தினமாக இருந்தாலும் அதற்கான பரிசுகளை நாம் சர்பிரைசாக கொடுக்க வேண்டும். அதை வாங்கும் போது ெபறுபவர்களின் முகத்தில் ஏற்படும் அந்த சந்தோஷ சிரிப்புக்கு ஈடு இணை கிடையாது. அந்த சிரிப்பினை இந்தியா முழுக்க சர்பிரைஸ் இந்தியா அளித்து வருகிறது. இந்தியா முழுக்க 250க்கும் மேற்பட்ட நகரங்களில் சர்பிரைஸ் இந்தியா செயல்பட்டு வருகிறது. இனி உங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு பரிசு கொண்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம்.

கார்த்திக் ஷண்முகம்



Tags : loved ones , Gifts for those looking for loved ones!
× RELATED தங்களை பற்றி கூட அல்லாமல்...