×

இந்தியாவில் இருந்தபடியே பாகிஸ்தானுக்குள் செல்லாமல் ரபேல் போர் விமானம் மூலம் இனி தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கலாம்: ராஜ்நாத் சிங்

நியூயார்க்: ரபேல் போர் விமானம் இருப்பதால் இனி தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்க நாம் பாகிஸ்தானுக்குள் செல்ல தேவையில்லை. இந்தியாவில் இருந்தபடியே அவற்றை அழித்து விடலாம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இந்தியா - அமெரிக்கா இடையே அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நாளை நடக்கிறது. இதற்காக அங்கு சென்றுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

இந்தியாவின் இராணுவ வலிமை அதிகரித்து வருகிறது எனவும், இந்தியா விரும்பினால், அது பாகிஸ்தானில் உள்ள இராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள்  பகுதிகளைத் தாக்கியிருக்கலாம் என பேசினார். ஆனால் அது பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவித்தார். பயங்கரவாத பயிற்சி முகாம்கள் உள்ள இடங்களை  மட்டுமே குறிவைத்து அகற்ற வேண்டும் என்று முடிவு செய்தோம். அங்கு ஒரு குடிமகன் கூட கொல்லப்படவில்லை, எந்த பாகிஸ்தான் இராணுவ தளத்தையும் நாங்கள் தாக்கவில்லை என தெரிவித்தார். ஒரு நாட்டின் இறையாண்மையை நாம் ஒருபோதும் தாக்க விரும்பவில்லை என கூறினார். இதுதான் எங்கள் குணம் என்று பேசினார்.

தற்போது, இந்திய ராணுவம் முதல் ரபேல் போர் விமானத்தை பெற்றுள்ளது என தெரிவித்தார். இனி தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்க நாம் பாகிஸ்தானுக்குள் செல்ல தேவையில்லை எனவும் இந்தியாவில் இருந்தபடியே அவற்றை அழித்து விடலாம். என தெரிவித்தார். பாகிஸ்தானுடன் எப்போதும் சுமூக உறவையே இந்தியா நாடி உள்ளது என தெரிவித்தார். வாஜ்பாய் ஆட்சியில் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டினார். பதிலுக்கு பரிசாக கார்கில் போரை கொடுத்தனர். பிரதமர் மோடியும் பாகிஸ்தானுடன் சுமூக உறவை விரும்பினார். இப்போதும் பதிலுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அனைவரும் அறிவர் என கூறினார்.

Tags : India ,Rajnath Singh ,terrorist camps ,Rafael ,militants ,Pakistan ,camps , Rafael warplanes,no longer,destroy Pakistani militants',camps , India,Rajnath Singh
× RELATED “தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த...