×

மாநகராட்சி இடத்தில் அமைத்த ஆக்கிரமிப்பு கடை அகற்றம்

ஆலந்தூர்: ஈக்காட்டுதாங்கலில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்ட பெட்டிக்கடையை அதிகாரிகள் அகற்றினர். சென்னை மாநகராட்சி 170வது வார்டுக்கு உட்பட்ட கிண்டி ஈக்காட்டுதாங்கலில்  மாநகராட்சிக்கு சொந்தமான அம்மா உணவகம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலகம் உள்ளது. இந்த இடத்தில் 300 சதுர அடி இடம் தனக்கு சொந்தமானது எனக்கூறி அதே பகுதியை சேர்ந்த  ஹரியப்பன் என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு அலுவலக வளாகத்தில் புகுந்து ஒரு பெட்டிக்கடையை வைத்தார்.

இதுபற்றி அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களுடன் வந்து அதனை அகற்ற முயன்றனர். அப்போது  ஹரியப்பன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அதிகாரிகளிடம் தகராறு செய்தார். இதையடுத்து கிண்டி போலீசார் வரவழைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அலுவலகத்துக்குள் வைக்கப்பட்ட கடையினை அதிகாரிகள் அங்கிருந்து அகற்றினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : shop ,corporation space ,space , Municipal space, erected, occupied shop, disposal
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி