×

தமாகாவுக்கு சைக்கிள் கிடையாது தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு : கட்சி நிர்வாகிகள் அதிருப்தி

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தமாகாவுக்கு தென்னந்தோப்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. சைக்கிள் சின்னம் கிடைக்காததால் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கேட்டு மாநில தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இல்லாவிட்டால், மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரிக்‌ஷா இதில் ஏதாவது ஒரு சின்னத்தை தமாகா சார்பில் கேட்டனர். ஆனால் சைக்கிகள் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிட்டீர்களோ அந்த சின்னத்தை தான் ஒதுக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. இதனால் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது போட்டியிட்ட தென்னந்தோப்பு சின்னத்தை கேட்டனர். அதன் அடிப்படையில் தமாகாவுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்காததால் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.

Tags : executives ,South African ,Party ,TMK ,South , TMK,bicycle symbol, South
× RELATED தென்ஆப்ரிக்காவுடன் முதல் டி 20 போட்டி: 28...