பெர்குசன் அதிரடியில் சிட்னி தண்டர் வெற்றி

பிரிஸ்பேன்: பிக் பாஷ் டி20 லீக் தொடரின் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 29 ரன் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது. பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சிட்னி தண்டர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. கேப்டன் கால்லம் பெர்குசன் ஆட்டமிழக்காமல் 73 ரன் (44 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். கவாஜா 22, அலெக்ஸ் ராஸ் 30, கிறிஸ் கிரீன் 25 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் 19.2 ஓவரில் 143 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பென் கட்டிங் 28, ரென்ஷா 26, பான்ட்டன் 16, மார்க் ஸ்டெகடீ 15, பிரையன்ட் 11 ரன் எடுத்தனர். பெர்குசன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தண்டர் அணி 2 புள்ளிகள் பெற்றது.

Related Stories:

More
>