×

24 மணி நேரமும் என்இஎப்டி அமலுக்கு வந்தது

மும்பை: நாள் முழுக்க 24 மணி நேரமும் என்இஎப்டி டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யும் வசதி நேற்று அதிகாலை 12.01க்கு அமலுக்கு வந்தது. அமெரிக்கா உட்பட பல பணக்கார நாடுகளில் தான் 24 மணி நேர டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறை உள்ளது. இந்தியாவில் இதற்கு கட்டுப்பாடு இருந்தது. விடுமுறை நாட்களில் இந்த வசதி இல்லை. டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதியை 24 மணி நேரமும் அமல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த திட்டத்தை வங்கிகளுடன் ஆலோசித்து சமீபத்தில் ரிசர்வ் வங்கி இது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்தது. நேற்று அதிகாலை 12.01க்கு இந்த 24 மணி நேர டிஜிட்டல் என்இஎப்டி பணபரிவர்த்தனை வசதி அமலுக்கு வந்தது. இந்த பணபரிவர்த்தனைக்கு எக்காரணம் கொண்டும் கட்டணம் வசூலிக்க கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

Tags : 24 hours, NEFT, came into force
× RELATED மூன்றாவது நாளாக ஏற்றத்தில் தங்கம்...