×

ரூ.1.37 கோடிக்கு ஏலம் போன சூப்பர்மேன் கதாபாத்திர உடை..!


திரைப்படத்தில் சூப்பர்மேன் அணிந்திருந்த உடை, சுமார் ஒரு கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜுலியன் என்ற ஏல நிறுவனத்தில் பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன.

இதில் 1978ஆம் ஆண்டு வெளியான சூப்பர் மேன் படத்தில் சூப்பர் மேனாக நடித்திருந்த க்ரிஸ்டோபர் ரீவீ (Christopher Reeve) அணிந்திருந்த உடை, சுமார் ஒரு கோடியே 37 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஒன்றின் உடை அதிக தொகைக்கு ஏலம் போனது இதுவே முதன்முறை எனவும் கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் கோஸ்ட்பஸ்டர்ஸ்-2 படத்தில் டேன் அக்ராய்ட் அணிந்திருந்த ஜம்ப்சூட் சுமார் 22 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.

Tags : Superman Character Costume Auctioned ,Superman Character Style , Superman Character Style Auctioned For Rs 1.37 Crore!
× RELATED தெற்கு ரயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில்...