×

ஃபார்ச்சூன் 500 இந்தியா பட்டியல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடம்: பின்தங்கிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்

டெல்லி: இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஃபார்ச்சூன் 500 பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. நடப்பு ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருமானம் ரூ.5.81 லட்சம் கோடியாகும். இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் தற்போது முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருமானம் 41.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

அது ஐஓசி வருமானத்தை விட 8.4 சதவீதம் அதிகமாகும். ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 26.6 சதவீதம் கூடுதல் வருமானம் ஈட்டியது. அதன் வருமானம் ரூ.5.36 லட்சம் கோடியாகும். இருப்பினும் ரிலையன்ஸ் ஈட்டிய வருமானமானது ஐஓசி வருமானத்தைவிட இரு மடங்காகும். ஐஓசி வருமானம் ரூ.39,588 கோடி அதிகரித்துள்ளது. ஆனால் அதைவிட இருமடங்கு அதிகம் பெற்று ரூ.5.81 லட்சம் கோடியுடன் ரிலையன்ஸ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபமானது ஐஓசி லாபத்தை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2015-ம் நிதி ஆண்டில் ரிலையன்ஸ் மிகவும் அதிகபட்சமாக 4.8 மடங்கு அதிக வருவாய் ஈட்டியுள்ளது. அந்த ஆண்டில் ரிலையன்ஸ் வருமானம் சுமார் ரூ.23,566 கோடியாகும். ஆனால் ஐஓசி வருமானம் ரூ.4,912 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஃபார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் வருமானம் 2019-ம் ஆண்டில் 9.53 சதவீதம் அதிகரித்துள்ளது மற்றும் லாபம் 11.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டுபட்டியலில் இடம் பிடித்த 57 நிறுவனங்கள் இம்முறை பட்டியலில் இல்லை. பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்த நிறுவனங்களும், வங்கிகள் இணைப்பில் இணைந்த வங்கிகளும் பட்டியலில் இல்லை. ஐஓசி கையகப்படுத்திய ஹெச்பிசிஎல் நிறுவனம், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் வாங்கிய ஆர்இசி நிறுவனம், பாங்க் ஆஃப் பரோடாவுடன் இணைக் கப்பட்ட விஜயா வங்கி, தேனா வங்கிகள் தற்போதைய பட்டியலில் இல்லை. அதேபோல டாடா ஸ்டீல் வாங்கிய பூஷன் ஸ்டீல் நிறுவனம், ஐடிஎஃப்சி வங்கியுடன் இணைக்கப்பட்ட கேபிடல் ஃபர்ஸ்ட் நிறுவனங்களும் பட்டியலில் இடம்பெறவில்லை.

நிறுவனங்கள் எதிர்கொண்ட நஷ்டமும் கணிசமாகக் குறைந்துள்ளது. மொத்தம் 63 நிறுவனங்கள் எதிர்கொண்ட ஒட்டுமொத்த நஷ்டம் ரூ.1.67 லட்சம் கோடியாகும். கடந்த ஆண்டு 79 நிறுவனங்கள் எதிர்கொண்ட நஷ்டம் ரூ.2 லட்சம் கோடியாக இருந்தது. மொத்தமுள்ள 22 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் எதிர்கொண்ட நஷ்டம் ரூ.74,253 கோடியாகும். இதில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ரூ. 1907 கோடியும், லட்சுமி விலாஸ் வங்கி ரூ. 894 கோடியும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. கூட்டுறவு மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உட்பட மொத்தமுள்ள 24 வங்கிகளின் லாபம் 6.16 சதவீதம் அதிகரித்து ரூ.60,747 கோடியாக அதிகரித்துள்ளது.

எண்ணெய் எரிவாயு துறையில் உள்ள 8 நிறுவனங்களின் வருமானம் 22.3 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கிகளின் லாபம் 15.88 சதவீதம் உயர்ந்துள்ளது. பட்டியலில் இடம் பெற்றுள்ள இன்ஃபோடெக் நிறுவனங்களின் வருமானம் 4.98 சதவீதம் உயர்ந்துள்ளது. உற்பத்தித்துறை நிறுவனமான ஹெச்இஜி லிமிடெட் 206-வது இடத்திலிருந்து 181-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேபோல 161-வது இடத்திலிருந்த உஷா மார்டின் நிறுவனம் மிகப்பெரும் சரிவைச் சந்தித்து 441-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ.5.80 லட்சம் கோடி), ஐஓசி (ரூ.5.35 லட்சம் கோடி), ஓஎன்ஜிசி (ரூ.4.36 லட்சம் கோடி), எஸ்பிஐ (ரூ.3.30 லட்சம் கோடி), டாடா மோட்டார்ஸ் (ரூ.3.03 லட்சம் கோடி), பிபிசிஎல் (ரூ.3.02 லட்சம் கோடி), ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் (ரூ.1.75 லட்சம் கோடி), டாடா ஸ்டீல் (ரூ.1.59 லட்சம் கோடி), கோல் இந்தியா (ரூ.1.52 லட்சம் கோடி).

Tags : India ,Backward Indian Oil Corporation ,Reliance Industries , Fortune 500 India, List, Reliance Industries, First, Backward, Indian Oil Corporation, Company
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை