×

விண்ணில் 6 மாத ஆய்வுக்கு பிறகு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

மாஸ்கோ: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 6 மாதங்களாக தங்கி ஆய்வு செய்து வந்த 3 வீரர்கள் நேற்று பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவின் கேட் ரூபின்ஸுடன் ரஷ்யாவை சேர்ந்த செர்கே ரைசிகோவ் மற்றும் செர்கே குட்-ஸ்வெர்ச்கோவ் ஆகியோர் சென்றனர். 6 மாதங்களாக அங்கு தங்கி ஆய்வுகள் செய்த அவர்கள், நேற்று ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலமாக பத்திரமாக திரும்பி வந்தனர். கஜகஸ்தானின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.55 மணியளவில் அவர்களின் விண்கலம் தரையிறங்கியது. வீரர்கள் பாதுகாப்பாக விண்கலத்தில் இருந்து புவியிர்ப்பு விசைக்கு பழக்கப்படுத்தும் விதமாக வெளியே கொண்டு வரப்பட்டு, மருந்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவர்கள் 3 பேரும் நலமாக உள்ளனர்….

The post விண்ணில் 6 மாத ஆய்வுக்கு பிறகு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : Earth ,Moscow ,International Space Research Center ,Dinakaran ,
× RELATED நிலவுக்கு விண்கலத்தை ஏவியது சீனா