×

அரசியல் வேண்டாம் என அமிதாப் அறிவுரை: மும்பையில் ரஜினி பரபரப்பு பேச்சு

சென்னை: அரசியலில் நுழையக் கூடாது என்று அமிதாப் பச்சன் எனக்கு அறிவுரை கூறினார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:இந்தி சினிமாவில் அமிதாப்பச்சன் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் எனக்கு மூன்று அறிவுரைகள் கூறினார். உடர் பயிற்சியைத் தவறாமல் செய்ய வேண்டும், எப்போதும் நம்மை பிஸியாக வைத்துக் கொள்ள வேண்டும், அரசியலில் நுழையக்கூடாது. இந்த மூன்றும் அவர் எனக்குகூறியவை தர்பார படத்தில் இதுவரை நடிக்காத போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். மற்ற வேடங்ளிலிருந்து இது மாறுபட்டிருக்கும். திருநங்கை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Tags : Amitabh ,rally ,Mumbai No ,Rajni ,Mumbai ,Rajini , No politics, Amitabh advises, in Mumbai, Rajini, sensational talk
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி