×

இந்தியா-பாகிஸ்தான் போர் வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி: வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் போரில் நமது வீரர்கள் பெற்ற வெற்றி வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது என வெற்றி தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இந்திய ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில், ஏறக்குறைய 90,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அப்போது தான் வங்கதேசம் நாடு புதிதாக உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்ற டிசம்பர் 16ம் தேதி `வெற்றி தினமாக’ (விஜய் திவஸ்) கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று வெற்றி தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், `‘வெற்றி தினத்தன்று, இந்திய ராணுவ வீரர்களின் தைரியம், வீரம், துணிச்சலுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்நாளில் நமது வீரர்கள் பெற்ற வெற்றி வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது’ என கூறியுள்ளார். இதேபோல, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `வெற்றி தினத்தில் இந்திய ராணுவத்தினரின் தைரியத்துக்கும் வீரத்துக்கும் நாடு தலை வணங்குகிறது. அனைத்து சூழல்களிலும் நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. அவர்களின் தியாகமும், சேவையும் ஒரு போதும் மறக்க முடியாதது’ என கூறியுள்ளார்.

Tags : Modi ,soldiers ,War Heroes of India ,Pakistan , Prime Minister Modi, congratulations , war heroes of India-Pakistan
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்