×

தர்பார் டிரெய்லர் வெளியீடு

சென்னை: ரஜினியின் தர்பார் பட டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி, தம்பி ராமைய்யா, பிரதீக் பப்பர் உள்பட பலர் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து பட டிரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் ரஜினியின் சண்டை காட்சியுடன் ‘சும்மா கிழி’ பாடல் காட்சியும் இடம்பெற்றது. படத்தில் ரஜினி பேசும் பன்ச் வசனங்களும் இடம்பெற்றுள்ளது. நயன்தாரா, வில்லனாக நடிக்கும் சுனில் ஷெட்டி ஆகியோரின் காட்சிகளும் ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன.


Tags : Darbar, trailer, release
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...