×

குடியுரிமை திருத்த சட்டதிருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக சத்யாகிரகமே சிறந்த போராட்ட முறை : ராகுல்காந்தி

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டதிருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக சத்தியாகிரக போராட்டம் நடத்த ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, அமைதியான வழியில் போராடுபவர்களுக்கே ஆதரவு என்றும் கடுமையான சட்டங்களை எதிர்க்க சத்யாகிரகமே சிறந்த போராட்ட முறை என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதா நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அஸ்ஸாம், மேகாலயா, திரிபுராவில் ஒருவாரமாக இப்போராட்டங்கள் நீடிக்கின்றன. இந்நிலையில் மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்கள் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளன. இந்நிலையில், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். டெல்லி போரட்டத்தின்போது, பேருந்துகள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார், மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். பல்கலைக்கழக நிர்வாகிகளின் அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைந்த போலீசார், நூலகம், விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி ஆகியவற்றில் இருந்த மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர்.


Tags : Satyagraha ,Rahul Gandhi ,Congress , Citizenship Amendment, Rahul Gandhi, Congress, Satyagraha Struggle,
× RELATED உப்பு சத்தியாகிரக போராட்ட 93ம் ஆண்டு...