×

செவ்வாயில் உங்களின் பெயர்!

நன்றி குங்குமம் முத்தாரம்

புது வருடம் பிறக்க சில நாட்கள் இருக்கின்றன. இந்த சந்தோஷ தருணத்தில் அதிரடியாக ஒரு ஆஃபரை அறிவித்திருக்கிறது நாசா. ஆம்; 2020-ம் வருடம் ஜூலை மாதத்தில் நாசாவிலிருந்து ஒரு விண்கலம் செவ்வாய் கிரகத்துக்குப் புறப்படவிருக்கிறது. இந்த நிகழ்வைப் பிரபலமாக்குவதற்காக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பைக் கொடுத்தது.

‘‘உங்களில் பலருக்கு செவ்வாய் கிரகத்துக்குப் போகவேண்டும் என்ற ஆசையிருக்கும். ஆனால், அப்படி போவதற்கான சூழலும் பண வசதியும்  இருக்காது. அதனால் நாங்கள் உங்களின் பெயரை செவ்வாய் கிரகத்துக்கு எடுத்துச் செல்கிறோம்...’’ என்பதுதான் அந்த அறிவிப்பு. உங்களின் பெயர் செவ்வாய் கிரகத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமென்றால் நாசாவின் பிரத்யேக தளத்தில் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு உங்களின் பெயர் செவ்வாய் வரைக்கும் போய்விடும்.

Tags : Mars , Your name on Mars!
× RELATED திருமணத்துக்குத் தடையாகும் செவ்வாய் தோஷம்