×

பண கலாச்சாரம் அடிமட்டம் வரை பரவி விட்டது: கோவன், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர்

அரசாங்கம் சரியான அரசியல் களத்தில் சென்றால் தான் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செய்ய முடியும். தற்போது அரசு, மக்கள் நலத்திட்டங்களை செய்வதற்கு பதிலாக,  தனியார் நிறுவனத்தை அமர்த்தி விட்டார்கள். அவர்களும் ஏற்கனவே ஏல முறைப்படி தான் டெண்டர் எடுத்து பணிகளை செய்து வருகின்றனர்.  ஒவ்வொரு துறைகளும் எப்படி தனியாருக்கு ெகாடுக்கிறீர்களோ அதன் விளைவு தான் இது. அதனால் தான் மக்களும் ஏன் தேர்தல் நடத்துகிறீர்கள் மொத்தத்திற்கு ஏலம் விட்டு விடுங்கள் என்பது தான் மக்களின் கருத்தாக உள்ளது. அனைத்து துறைகளும் ஏலம் விடுகிறீர்கள் மக்கள் பிரதிநிதிகளையும் ஏலம் விட்டு விடுங்கள் என்ற நிலையில் மக்களின் கருத்தாக உள்ளது. எல்லா துறைகளும் எப்படி தனியாருக்கு விடுவது ஜனநாயக குற்றமோ,  திட்டங்களை மக்களிடம் ெகாண்டு செல்லக்கூடிய பிரதிநிதிகளை ஏலம் எடுப்பது ஜனநாயகம் என்கிற பெயரில் பணம் படைத்தவர்களின் அதிகாரமாக மாறுகிறது.

யாரெல்லாம் டெண்டர் எடுக்க முடிகிறதோ ஒவ்வொரு துறையும் ஏலம் எடுக்க முடிகிறதோ அவர்களுடைய ஆட்சியாக இருக்கிறது. இது உண்மையான ஜனநாயகம் இல்லை என்பதை தான் காட்டுகிறது. பிரதிநிதிகளை ஏலம் எடுப்பது, ஏற்கனவே அனைத்து துறைகளும் தனியாருக்கு ஒப்படைத்த நிலையில் பிரதிநிதிகளையாவது மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ஆறுதல் இருந்தது; தற்போது அதுவும் போய்விட்டது. அரசு, ஜனநாயகம், பொதுத்துறைகளில் முழுக்க முழுக்க முதலாளிகள், பணம் படைத்தவர்கள் தான் ஆள்கின்றனர். மாநில தேர்தல் ஆணையம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எந்த கட்சி ஆட்சி செய்கிறதோ அவர்கள் அரசியல் காரணத்திற்காக என்ன என்னவோ பிளான் பண்ணுகிறார்கள். உதாரணமாக 2011ம் ஆண்டு வரை மக்கள் தொகை படி தேர்தல் நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை  உறுதிப்படுத்தாமல் அரசு செயல்படுகிறது. உடனே தேர்தலை எதிர்த்த  சிலர் நீதிமன்றம் செல்கின்றனர். அதன்பிறகு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு ஊராட்சிக்கு மட்டும் தேர்தல் நடத்துகிறது அரசு.

 தற்போது ஆட்சி செய்யும் கட்சிகள் எதையெல்லாம் சொல்கிறதோ அதை உறுதிப்படுத்துவதில்  தான் தேர்தல் ஆணையம் உள்ளது. தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இல்லை. ஆட்சி செய்பவர்கள் என்ன சொல்கிறார்களோ,  அதை செய்வதில்தான் தேர்தல் ஆணையம் முழுமையாக உள்ளது. அரசியல் சட்டம் அனைத்தையும் அவர்கள் மீறுகிறார்கள். எங்கெல்லாம் போராட்டம் நடத்தப்படுகிறதோ அங்கு நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட முடிவுகள், திரும்ப பெறப்படுகிறது. தேர்தல் ஆணையத்திற்கு, பல்வேறு தவறுகள் நடக்கிறது என்று தெரியவரும் போது அவர்களும் சேர்த்து ஒழுங்குபடுத்த வேண்டும். ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டிய கடமை பயனாளர்களுக்குத்தான் உள்ளது.

அதற்கான முனைப்புகளை காட்ட வேண்டும். அரசோ ஒரு தவறான கலாச்சாரத்தை உருவாக்கி கீழ்மட்டம் வரை கொண்டு செல்கிறது. மக்களும் அதற்கு கட்டாயத்தின் பேரில் ஆளாகிறார்கள். இலவசத்திற்கு மக்கள் அடிமையாகிறார்கள் என்றால் பணத்தை வைத்து எதையும் செய்யலாம் என்ற கலாச்சாரத்தை கீழ்மட்டம் வரை அரசே கொண்டு செல்கிறது. இதற்கு எதிராக போராட்டம் எனும் தீ எட்டுத்திக்கும் பரவ வேண்டும். அப்போது தான் அரசின் அடாவடி நடவடிக்கை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். பிரதிநிதிகளையாவது மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ஆறுதல் இருந்தது; தற்போது அதிலும் நம்பிக்கை போய்விட்டது. அரசு, ஜனநாயகம், பொதுத்துறைகளில் முழுக்க முழுக்க முதலாளிகள், பணம் படைத்தவர்கள் தான் ஆள்கின்றனர்.

Tags : Cowan ,People's Arts Literary Association , Cash culture,grassroots: Cowan , singer ,People's Arts Literary Association
× RELATED நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா...