×

குடியுரிமை மசோதாவை அனைவரும் ஏற்கும் காலம் வரும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டி

சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா  சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: அதிமுகவுடன் கூட்டணி கட்சிகளான நாங்கள் உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. குடியேற்ற மசோதாவை பொறுத்தவரை எல்லா மதங்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்த பின்பு இதைப்போன்ற மாற்றங்களை கொண்டுவர வேண்டும். இதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு ‘இலங்கை தமிழர்கள் பிரசசனையை பொறுத்தவரை இந்திய அரசு கூறியதைப்போல் இலங்கை தமிழர்கள், தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக கருதினால் தமிழகத்தில் இருக்கலாம்.

இல்லையெனில் அவர்கள் விருப்பம்போல் இடம் பெயரலாம் என்ற நிலைய உருவாக்க வேண்டும். ஏற்கனவே காஷ்மீர் விவகாரம் ராமர் கோவில், அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்பட்டது. அதைபோல் குடியுரிமை திருத்த மசோதாவும்  அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு எல்லா மதத்தினராலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால்  இந்த குடியேற்ற மசோதா சட்டத்தை தேமுதிக ஏற்றுக்கொள்ளும் குடியேற்ற மசோதாவில் அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பு இருப்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.  பின்பு அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Premalatha Time ,Treasurer , Time , accept,Citizenship, Interview,h Treasurer Premalatha
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு