×

பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:முன்னாள் முதலமைச்சரும் மத்திய அமைச்சருமான, 82 வயது நிரம்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லாவை எவ்விதக் காரணமும் இன்றி, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருப்பது நம்முடைய ஜனநாயக மரபுகளையும், அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களையும் அவமதிக்கும் செயலாகும். அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Stalin ,Farooq Abdullah Farooq Abdullah , Stalin's insistence,releasing,Farooq Abdullah
× RELATED மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்