×

ரூ.50 கோடி செலவில் அமையும் ஜெயலலிதா சமாதியில் பீனிக்ஸ் பறவை இறக்கை பொருத்த துபாயில் இருந்து ஊழியர்கள் வருகை: ஜனவரிக்குள் முடிக்க முதல்வர் உத்தரவு

சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு ₹50.08 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தாடர்ந்து, மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமைக்கப்படும் கட்டுமான பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்தாண்டு மே 7ம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், பிரதான கட்டிடத்தில் பீனிக்ஸ் பறவை தோற்றத்தில் 15 மீட்டர் உயரத்தில் இறக்கை அமைக்கப்படுகிறது.

இந்த பீனிக்ஸ் பறவை பொருத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு தமிழகத்தில் உள்ள பொறியாளர்களுக்கு போதிய அனுபவம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், பீனிக்ஸ் பறவை இறக்கைக்கான ஹேண்டில் லிவர் பொருத்தும் பணியை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, துபாயில் இருந்து பொறியாளர்கள் வந்து ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கினார்கள். தொடர்ந்து துபாயில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மட்டும் சூப்பர் ஸ்டெக்சர் வடிவமைப்புடன் கூடிய பீனிக்ஸ் பறவை இறக்கை பொருத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் ஜனவரிக்குள் பணிகளை முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Dubai ,Chief Minister ,Jayalalithaa ,mausoleum ,Dubai Phoenix Bird Flyer of Employees Jayalalithaa , Employees , Dubai Phoenix Bird, Flyer , visit Jayalalithaa mausoleum
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...