மாமனார் குடும்பத்துக்கு ‘பாயசம்’ நகைகளுடன் புதுப்பெண் ஓட்டம்

பதான்:உத்தரப் பிரதேச மாநிலம், கோட்வாலியைச் சேர்ந்தவர் பிரவீன். இவருக்கும் அஜம்காரைச் சேர்ந்த ரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 9ம் தேதி திருமணம் நடந்தது. மாமியார் வீட்டு விருந்து முடிந்த நிலையில், மணமக்கள் கோட்வாலிக்கு திரும்பினர். நேற்றுக் காலை பிரவீன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னலை உடைத்து உள்ளே எட்டிப் பார்த்தனர். அங்கு அனைவரும் அலங்கோலமாக தரையில் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்து வரவழைத்து, உள்ளே சென்றனர். அங்கு புதுப்பெண் ரியாவை தவிர மற்றவர்கள் அனைவரும் மயங்கி கிடந்ததனர். தண்ணீர் தெளித்து அவர்களை எழுப்பியபோது, அவர்கள் பேந்த,  பேந்த விழித்தனர். அதன் பின்னர்தான், இரவு உணவை சாப்பிட்டதும் அவர்கள் மயங்கியது தெரியவந்தது.

உடனடியாக அவர்கள் பீரோ உள்ளிட்டவற்றை சோதனை செய்தபோது, அதில் இருந்த 70,000 ரொக்கம் மற்றும் ₹3 லட்சம் பெறுமானமுள்ள நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. ரியாவின் வீட்டுக்கு போன் செய்து கேட்டபோது, அவர் அங்கு வரவில்லை என்று தெரியவந்தது. இதன் மூலம், அவர்தான் இரவு விருந்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு, ரொக்கப்பணம் மற்றும் நகையுடன் கம்பி நீட்டியது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>